மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்துக்கும், சிந்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சிந்தியா, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார். பின்னர் இதையடுத்து நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஜே.பி.நட்டா தலைமையில் ஜோதிர்ராதித்ய சிந்தியா பா.ஜ.கவில் இணைந்தார். கட்சியில் இணைந்த கையோடு சிந்தியாவுக்கு மாநிலங்களவை சீட்டையும் பாஜக ஒதுக்கியுள்ளது. இதனிடையே 18 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து திடீரென பாஜகவில் இணைந்த சிந்தியா, ராகுல் காந்திக்கு நல்ல நண்பராக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் சிந்தியாவின் இந்த திடீர் முடிவு ராகுலை தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் யார் முதல்வர்? என்று கமல்நாத் மற்றும் சிந்தியா இடையே போட்டி நடந்தபோது, இருவரையும் அழைத்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருவருடன் இருக்கும் புகைப்படத்தை ராகுல் பதிவிட்டிருந்தார். தற்போது, சிந்தியா பாஜகவில் இணைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி 2018ல் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை ரீ-ட்வீட் செய்துள்ளார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…