வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாவே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வெங்காய விலை தற்போது உயர்வில் உள்ளது.இந்த விவகாரம் நாடும் முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த விவகாரத்தை எதிர்கட்சியினரும் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது,நான் வெங்காயம் ,பூண்டு சாப்பிடுவதில்லை.வெங்காயம்,பூண்டு குறித்த அக்கறை இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவள் என்று பேசினார்.அவர் இவ்வாறு பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது.சமூக வலைத்தளங்களில் பலரும் நிர்மலா சீதாராமனின் பேச்சை விமர்சித்தனர்.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கூறுகையில், நாட்டில் என்ன நடக்கிறது என்றே மத்திய நிதியமைச்சருக்கு தெரியாது.அடிப்படையில் அவர் ஒரு திறமையற்றவர்.நாட்டில் நிலவும் வெங்காயவிலை உயர்வு குறித்து கேட்டால் வெங்காயம் ,பூண்டு சாப்பிடுவதில்லை என்று கூறுகிறார்.நிதியமைச்சரின் வேலை என்ன ?வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து கேள்வி கேட்டால் ,பூண்டு வெங்காயம் சாப்பிடுவது இல்லை என்று கூறுவதா ? உங்களது தனிப்பட்டவிருப்பதை யார் கேட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் நிதி பொறுப்பை திறமையான வல்லுநர்கள் கையாண்டார்கள் .இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்ட பொருளாதார வலிமை தற்போது அழிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…