கமல்ஹாசனுக்கு புலி புகைப்படத்தை பரிசளித்த ராகுல்காந்தி.! உங்கள் அணுகுமுறையின் அடையாளம் என புகழாரம்.!
ஒற்றுமை யாத்திரை பயண சந்திப்பின் போது கமல்ஹாசனுக்கு புலி புகைப்படத்தை ராகுல் காந்தி பரிசளித்தார்.
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார். அதன் பிறகு ராகுல் காந்தி மற்றும் கமல்ஹாசன் இருவரும் கலந்துரையாடினர்.
அந்த கலந்துரையாடல் முடிவில், ராகுல் காந்தி கமலஹாசனுக்கு பரிசளித்தார். ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான் புகைப்படம் எடுத்த புலியின் உருவப்படத்தை கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி பரிசளித்துள்ளார்.
அதனை கொடுத்து, “இந்த புலி புகைப்படமானது உங்கள் அணுகுமுறை மற்றும் வாழ்க்கையை பற்றியும் குறிக்கிறது. எனவும், நீங்கள் ஒரு சிறந்த இந்தியன் மற்றும் வெற்றியாளர் என்ற உண்மையை குறிக்கிறது.” என ராகுல்காந்தி குறிப்பிட்டார்.