கலைஞர் கருணாநிதி நினைவு தினம்.! மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல்காந்தி.!
இன்று தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் அமைதி பேரணி நடத்தி மரியாதை செலுத்தினார்.
அதே பல தமிழகத்தில் பலவாறு இடங்களில் திமுக தலைவர்கள், தொண்டர்கள் கலைஞர் நினைவு தினத்திற்கு தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
அதே போல, டெல்லியில் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி புகைப்படத்திற்கு , காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார். உடன், தமிழக காங்கிரஸ் எம்பிக்கள், திமுக எம்பிக்கள் உடன் இருந்தனர்.