இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய தேசிய ராணுவத்தை துவங்கி இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து விடுதலை வீரர்களை ஒருங்கிணைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது 127வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பலவேறு அரசியல் பிரபலங்கள் மரியாதை செலுத்தியும், சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில் இருக்கும் ராகுல் காந்தி தற்போது அசாம் மாநிலத்தில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில் , ராகுல் காந்தி , நேதாஜியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அந்த புகைப்படத்தை எக்ஸ் சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாளில் அவருக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் காந்தி, நேரு, ஆசாத், சுபாஸ் மற்றும் ஜான்சி படைப்பிரிவின் ராணி என்ற படைப்பிரிவுகளுடன் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டிருந்தது.
பன்மைத்துவம், சமூக மற்றும் பொருளாதார நீதி, சகிப்புத்தன்மை மற்றும் பாலின உள்ளடக்கம் ஆகியவற்றின் இந்திய மதிப்புகளுக்கு அவர் ஒரு முன்னணி எடுத்துக்காட்டு. ஜெய் ஹிந்த் என பதிவிட்டுள்ளார். மேலும், பன்மைத்துவம், சமூக மற்றும் பொருளாதார நீதியின் இந்தியாவின் மதிப்புக்கு நேதாஜி ஒரு முக்கிய காரணம் என்றும் கூறினார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு , தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் அன்று அவருக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அச்சமின்றி போராட வேண்டும்.அவரது சக்திவாய்ந்த ஆளுமை நமது சுதந்திர போராட்டத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். தேசம் எப்போதும் நேதாஜியை மிகுந்த நன்றியுடன் நினைவுகூரும் என பதிவிட்டு இருந்தார்.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…