கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, வயநாட்டில் காந்தி சிலையை திறந்து வைத்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி ஆக இருப்பவர் தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் இப்பகுதியில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை ராகுல் காந்தி கேரளா வந்துள்ளார். கோழிக்கோடு விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதனையடுத்து ராகுல்காந்தி வயநாட்டில் மானந்தவாடி காந்தி பூங்காவில் சிற்பி கே.கே.ஆர்.வெங்கராவால் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கை சிலையை திறந்து வைத்துள்ளார்.
அதன் பின் பேசிய அவர், மகாத்மா காந்தி பற்றிய சக்தி வாய்ந்த விஷயம் என்னவென்றால் அவர் எதை சொன்னாலும் செயல்படுத்தி விடுவார். இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என அவர் சொன்னதுடன் மட்டுமல்லாமல், அவர் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டார். மேலும் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனக் கூறிய அவர் பெண்களை மரியாதையுடன் நடத்தினார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…