ஹத்ராஸ் புறப்பட்ட ராகுல் காந்தி..! சுங்கச்சாவடியில் குவிக்கப்பட்ட உ.பி போலீசார்..!
ஹத்ராஸ் மாவட்டத்தில் 4 இளைஞர்களால் 19 -வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, இரண்டு நாள்கள் முன் உயிரிழந்த ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். அப்போது, உத்தரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து, மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், உ.பி.யின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஹத்ராஸுக்கு மீண்டும் இன்று புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நொய்டா-காசியாபாத் மற்றும் ஹத்ராஸ் வரை உ.பி போலீசார் எச்சரிக்கையாக உள்ளது. டெல்லி, நொய்டாவுடன் இணைக்கும் சுங்கச்சாவடி மூடப்பட்டு ஏராளமான போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
ஏராளமான பெண் போலீஸ்காரர்களும் , பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நிலைமை மோசமடைவதைத் தடுக்க மூத்த காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் உள்ளனர். மேலும், காஜியாபாத் வழியாக ராகுல் ஹத்ராஸை அடைவார் என்ற அச்சம் காரணமாக உ.பி. கேட்டில் காவல்துறையினர் உள்ளனர்.