ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோராம், தெலுங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் அடுத்து, நாடு முழுக்க 2024 ஏப்ரல் மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல் பரபரப்புகள் தொற்றிக்கொள்ள வரும் வேளையில் பிரதான கட்சி தலைவர்களும் தங்கள் தேர்தல் வேலைகளை மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தேர்தல் வேலைகளை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆரம்பித்து விட்டார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஆரம்பித்த பாரத ஒற்றுமை யாத்திரையானது தமிழகம் , கேரளா, கர்நாடகா என கடந்து காஷ்மீரில் நிறைவானது.
நாய்க்குட்டிக்கு பெயர் வைத்த விவகாரம்.! ராகுல்காந்தி – சோனியா காந்தி மீது புதிய புகார்.!
அதற்கடுத்தும், பிரச்சார மேடைகள் தவிர்த்து மக்களை நேரடியாக களத்தில் சந்தித்து வந்தார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி, வயல்வெளிகளுக்கு சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடுவது, தொண்டர்களுடன் பின்னர் அமர்ந்து இருசக்கர வாகனத்தில் பயணிப்பது என அவ்வப்போது மக்களை நேரில் சந்தித்து சாமானிய மக்களின் நிலைகளை களத்தில் இருந்து கேட்டறிந்து வருகிறார் ராகுல்காந்தி.
கடந்த சில நாட்களாக மிசோராம் , தெலுங்கானா என தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்த ராகுல்காந்தி, இடையில் டெல்லியில் கிருட்டி நகரில் உள்ள மரச்சாமான்கள் செய்யும் இடத்திற்கு நேரில் சென்று அங்குள்ள தச்சர்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர்களின் வாழ்வியல் பற்றி தெரிந்துகொண்ட ராகுல்காந்தி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், தச்சர்களிடம், உங்களுக்கு கடன் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என கேட்டேன், அதற்கு அவர்கள், “மரம் வாங்குவேன், பெரிய ஆர்டர் எடுப்பேன், கைவினை கலைஞர்களை வேலைக்கு அமர்த்துவேன், வியாபாரத்தை விரிவுபடுத்துவேன். ” என்றார்.
கிருத்தி நகரின் தச்சர் சகோதரர்களுடன் ஒரு நாள் முழுவதையும் செலவழித்து, அவர்களின் வேலையைக் கற்றுக்கொண்டேன். அவர்கள் எனக்கு ‘நாற்காலி’ செய்யும் முறையை கற்பித்தனர் எனபதிவிட்டு இருந்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…