வயநாடு – ரேபரேலி 2 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடிய ராகுல் காந்தி.!
மக்களவை தேர்தல் : மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் வயநாட்டில் 6,47,445 வாக்குகளை பெற்று 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
மேலும், ரேபரேலி தொகுதியிலும் அவர் 6,87,649 வாக்குகளை பெற்று 2.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார். தற்பொழுது, 2 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், எந்தத் தொகுதியில் ராஜினாமா செய்வது என முடிவு செய்யவில்லை என்றார். மேலும் அவர் பேசுகையில், “ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதி மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. உத்தரப்பிரதேச மக்கள் அரசியல் அறிவை கண்டு பிரம்மிக்கிறேன்.
உத்தரப்பிரதேசத்தில் I.N.D.I.A. கூட்டணி வெற்றிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி காரணம். பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிச்சயம் நிறைவேற்றும். தேர்தல் களத்தில் இருந்தது போலவே, தற்போதும் INDIA கூட்டணி ஒற்றுமையுடன் இருப்பதாக” கூறியுள்ளார்.