ஆந்திர பிரதேசம்: நான் மேற்கொண்ட ஒற்றுமை யாத்திரைக்கு மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தான் காரணம் என ராகுல் காந்தி வீடியோ மூலம் கூறியுள்ளார்.
மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின் பிறந்த தினம் இன்று (ஜூலை 8) கொண்டாடப்படுகிறது. ஆந்திராவில் காங்கிரஸ் நீண்ட வருடத்திற்கு பிறகு நிலையான ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “இன்று ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாள். அவர் உண்மையான மக்கள் தலைவர். ஆந்திர மக்களுக்காக பிறந்தவர். ஆந்திர மக்களுக்காக வாழ்ந்தவர். ஆந்திர மக்களை நம்பியவர்.
நாம் அவரை இழந்து இருப்பது சோகம். அவர், இன்று இருந்திருந்தால் ஆந்திரப் பிரதேசம் முற்றிலும் மேம்பட்டு இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அவரிடம் இருந்த அதே உணர்வு, உறுதிப்பாடு, பாசம் மற்றும் அன்பு ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளாவுக்கும் (ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவர்) உண்டு. நான் ஒய்எஸ்.ராஜசேகர ரெட்டியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். நான் மேற்கொண்ட பாரத ஒற்றுமை யாத்திரை அவரது யாத்திரையால் ஈர்க்கப்பட்டது என்று வீடியோவில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, 2004 ஆந்திர மாநில தேர்தலுக்கு முன்னர், 2003ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் முழுவதும் 11 மாவட்டங்களில் சுமார் 1500 கிமீ யாத்திரை மேற்கொண்டார். சுமார் 3 மாதங்கள் இந்த யாத்திரையை ராஜசேகரரெட்டி நடத்தினார். இதன் பலனாக 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வரானார். துரதஷ்டவசமாக செப்டம்பர் 2 2009இல் விபத்தில் உயிரிழந்தார். அதன் பிறகு 2011இல் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி என அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…