சென்னை: காங்கிரஸ் வெற்றிபெற்றால் அக்னி வீர் திட்டம் குப்பையில் போடப்படும் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.
மத்திய அரசு கடந்த 2022ஆம் ஆண்டு அக்னிவீர் எனும் திட்டத்தை கொண்டுவந்து அதன் மூலம் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைக்கும் குறிப்பிட்ட வயதிற்குட்பட்டவர்களை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி வருகின்றனர். இது மத்திய அரசின் நிரந்தர பணியாக கருதப்படாது. பணிக்கு சேர்பவர்களின் திறன் கண்டு அவர்கள் நிரந்தர வீரர்களாக முப்படை பிரிவில் சேர்க்கப்படுவர்.
இந்த அக்னி வீர் திட்டம் இளைஞர்களின் மத்திய அரசு பணிக்கான கனவை சிதைக்கிறது. ராணுவத்தில் ஒப்பந்த வேலை தேவையற்றது என்ற பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதே அக்னி வீர் திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஹரியானா மாநிலம் மகேந்திரகர் எனும் இடத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பாஜக கொண்டு வந்த அக்னி வீர் திட்டம் கிழித்து குப்பையில் போடப்படும் என்று கூறினார். மேலும், அக்னிவீர் திட்டம் ராணுவத்தில் தேவையில்லாத ஒன்று. அது பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்டது என விமர்சித்தார்.
மேலும், பாரத ஒற்றுமை யாத்திரையில் தான் பயணிக்கும் போது, மக்கள் தன்னிடம் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் பற்றியும், விலைவாசி உயர்ந்தது பற்றியும் கூறியதாக பேசினார். மேலும், வேளாண் கடன்களை ரத்து செய்ய பிரதமர் மோடியிடம் விவசாயிகள் கேட்டபோது அப்படி செய்தால், விவசாயிகளின் பழக்க வழக்கம்மாறிவிடும் என கூறியவர் பிரதமர் மோடி என்றும் நேற்றைய பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…