நான் எழுதி தருகிறேன்… மோடி பிரதமராக மாட்டார்.! ராகுல் காந்தி சூளுரை..!
Rahul Gandhi : மோடி பிரதமராக மாட்டார் என நான் எழுதி தருகிறேன் என்று ராகுல் காந்தி பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் பேச்சுக்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
நேற்று முன்தினம் வீடியோ மூலம் பேசிய ராகுல்காந்தி, பிரிவினைவாத பிரச்சாரங்களை கண்டுகொள்ளாதீர்கள். ஜூன் 4இல் மாற்றம் வரும். ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 30 லட்சம் மத்திய அரசு பணிகள் நிரப்பப்படும் என கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து நேற்று உத்திர பிரதேச மாநிலம் கன்னோஜி தொகுதியில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, ‘ மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வர மாட்டார் என்று நான் எழுத்துபூர்வமாக எழுதி தருகிறேன்.” என கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், உத்திர பிரதேசம் முழுவதும் I.N.D.I.A கூட்டணி புயல் வீசிக்கொண்டு இருக்கிறது. இந்தியா முழுக்க பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது. ஒவ்வொரு கட்ட வாக்குபதிவின் போதும், மோடியின் பிரதமர் கனவு கை நழுவி போகிறது. அடுத்தடுத்த நாட்களில் மக்கள் கவனத்தை திசைதிருப்ப இன்னும் பல வேலைகளை மோடி செய்வார் என்றும் இன்றைய பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார்.
உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் களம் காண்கிறது. கன்னோஜ் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். நாளை மறுநாள் அத்தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.