துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிக்கு வழங்குங்கள்.. ராகுல் காந்தி கோரிக்கை.!
டெல்லி: மக்களவை தேர்தல் முடிந்து நேற்று 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவியேற்பு நடைபெற்று முடிந்த பின்னர் நாளை சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி தேர்தல் தவிர்த்து ஒரேமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார்.
சபாநாயகர் தேர்வு குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், NDA கூட்டணியின் சபாபநாயகர் வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கிறோம் என ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளோம். ஆனால் NDA கூட்டணி துணை சபாநாயகர் பொறுப்பை நியமிக்க வேண்டும் அதனை எதிர்கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கையை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.