NDA ஆட்சி.., 15 நாளில் 10 பிரச்சனைகள்.! லிஸ்ட் போட்ட ராகுல் காந்தி.!
டெல்லி: கடந்த ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஜூன் 9ஆம் தேதி பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைத்தது. பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். காங்கிரஸ் கட்சி 99 எம்பிக்களை பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்த்து பெற்றுது.
கடந்த ஜூன் 9ஆம் தேதி முதல் தற்போது வரையில் கடந்த 15 நாட்களில் நாட்டில் 10 பிரச்சனைகள் நடந்துள்ளாதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளர். அது பற்றி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு லிஸ்ட் பதிவிட்டுள்ளார். அதில்,
- பயங்கரமான ரயில் விபத்து – ( மேற்கு வங்கத்தில் நிகந்த ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். )
- காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் – (காஷ்மீரில் சிவ்கோரி கோயிலுக்கு பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்கியதில் பேருந்து விபத்துக்குளானது. 10 பேர் உயிரிழந்தனர்)
- ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் அவல நிலை – (தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் ரயில்வே நிலையங்கள் கட்டுமான பணிகள் நிறைவுபெறாமல் இருப்பது)
- நீட் ஊழல் – (நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்தது. கருணை மதிப்பெண்கள் வழங்கியது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்தது)
- நீட் முதுகலை படிப்புக்கான நுழைவுத்தேர்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- UGC NET வினாத்தாள் கசிந்தது.
- பால், பருப்பு வகைகள், எரிவாயு, கட்டணம் மற்றும் விலை ஏற்றம் கண்டுள்ளது
- தீயால் எரியும் காடு – (நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட கட்டு தீ சம்பவம்)
- தண்ணீர் நெருக்கடி – (தலைநகர் டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை)
- வெப்ப அலைக்கு முறையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் இறப்புகள் அதிகரிக்கிறது.
என்று குறிப்பிட்டு, உளவியல் ரீதியாக பிரதமர் நரேந்திர மோடி பின்னடைவில் இருக்கிறார் என்றும், தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதிலேயே அவர் மும்முரமாக செயல்பட்டு வருகிறார் என்றும் விமர்சனம் செய்தார்.
மேலும், நரேந்திர மோடி மற்றும் அவரது NDA அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை எங்களால் ஏற்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் வலுவான எதிர்க்கட்சி தனது அழுத்தத்தைத் ஆளும்கட்சிக்கு தொடர்ந்து அளிக்கும் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
NDA के पहले 15 दिन!
1. भीषण ट्रेन दुर्घटना
2. कश्मीर में आतंकवादी हमले
3. ट्रेनों में यात्रियों की दुर्दशा
4. NEET घोटाला
5. NEET PG निरस्त
6. UGC NET का पेपर लीक
7. दूध, दाल, गैस, टोल और महंगे
8. आग से धधकते जंगल
9. जल संकट
10. हीट वेव में इंतजाम न होने से मौतें…— Rahul Gandhi (@RahulGandhi) June 24, 2024