பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார்! ராகுல் காந்தி விமர்சனம்!

Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளைமறுநாள் முதல் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று தேர்தல் பரபரப்புரை செய்தார். அப்போது 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் பிரதமர் மோடி என விமர்சித்து பேசியுள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய ராகுல் காந்தி ” பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்கு செய்ததை நாங்கள் கண்டிப்பாக விவசாயிகளுக்கு செய்வோம். நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்கள் 25 பேரின் ரூ.16 இலட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்து இருக்கிறார். நாங்கள் இதனை விவசாயிகளுக்கு செய்வோம். நிச்சயமாக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம்.
இப்படி பணக்காரர்களின் கடன்களை மோடி அவர்கள் தள்ளுபடி செய்து இருக்கிறார் ஆனால் ஏன் ஏழை விவசாயிகளின் கடனை ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை என்பது தான் என்னுடைய கேள்வி. மக்களும் இந்த கேள்வியை தான் கேட்கிறார்கள். அந்தப் பணம் 25 ஆண்டுகளுக்கான 100 நாள்கள் வேலைத் திட்டத்திற்கான பணத்துக்குச் சமம்.
என்னை பொறுத்தவரை நாட்டில் வெறும் 25 பேருக்கு மட்டுமே ஆட்சியை நடத்தி வருகிறார். நாங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பெற்றவர்களுக்கு பயிற்சி பெறும் உரிமையை வழங்குவோம் எனவும்” ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025