இங்கிலாந்தில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளை தொடர்ந்து, அவர் தேசிய விரோத கருவியாக மாறிவிட்டார் என ஜேபி நட்டா கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ராகுல் காந்தி தேச விரோத கருவிகளின் நிரந்தர அங்கமாகிவிட்டார் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, காங்கிரஸ் கட்சி தேச விரோத செயல்களில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது.
தேசத்தில் பலமுறை நிராகரிக்கப்பட்ட பிறகு, ராகுல் காந்தி தற்போது தேச விரோத கருவியின் நிரந்தர அங்கமாகிவிட்டார். இந்தியாவின் உள் விவகாரங்களில் மற்றொரு நாட்டின் தலையீட்டைக் கோருவது குறித்து ராகுல் காந்தியின் நோக்கம் குறித்து நட்டா கேள்வி எழுப்பினார்.
உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி வரும் நிலையில், ஜி20 மாநாடுகள் இங்கு நடைபெற்று வரும் நிலையில், வெளிநாட்டு மண்ணில் ராகுல் காந்தி தேசத்தையும், நாடாளுமன்றத்தையும் அவமதித்து வருகிறார் என்று நட்டா கூறினார்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஆளும் பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர். எதிர்கட்சியினரும் அதானி விவகாரத்தில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையை கூட்டு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர், இதனால் தொடர்ந்து 4வது நாளாக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
ராகுல் காந்தி, சமீபத்தில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசுகையில், இந்திய ஜனநாயகம் அழுத்தம் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் இந்தியாவில் எதிர்க்கட்சியாக இருந்து வழிநடத்துகிறோம் என்று கூறியிருந்தார்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…