ராகுல் காந்திக்கு ஜாமீன் கிடைத்தது..! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேச்சு…
சட்டம் மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.
ராகுல்காந்தி குற்றவாளி :
கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுல்காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை :
அதன்படி, பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூர்ணேஷ் மோடியின் வழக்கறிஞர் கூறியது :
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அடுத்த மேல்முறையீடு வரை அவருக்கு நீதிமன்றம் 30 நாட்களுக்கு ஜாமீன் வழங்கியதோடு அவரது தண்டனையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. என்று கேதன் ரேஷம்வாலா கூறினார்.
#WATCH | Rahul Gandhi is convicted u/s 499 and 500 of IPC. The sentence awarded is for 2 years and against that sentence…as per law, Court has granted him bail for 30 days & until his next appeal, the sentence is supended by Court: Ketan Reshamwala, Advocate for Purnesh Modi pic.twitter.com/DOlLdt1eXC
— ANI (@ANI) March 23, 2023
நீதித்துறை மீது நம்பிக்கை :
இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் நீதிபதிகள் மாற்றிக்கொண்டே இருந்ததால் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குத் தெரியும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார். நாங்கள் சட்டம் மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப்படி போராடுவோம். என்று அவர் மேலும் கூறினார்.