ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Rahul Gandhi

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்தது. அதன்படி, கேரளா வயநாட்டில் போட்டியிட்டு அங்கு தேர்தலும் முடிந்துவிட்டது.

ஏழு கட்டங்களாக நடைபெறும் பொதுத் தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும் மக்களவை தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மே 20 ஆம் தேதி) கடைசி நாளாகும்.

இந்நிலையில், 2004ஆம் ஆண்டு முதல் 2024 வரையில் சோனியா காந்தி வெற்றி பெற்று இருந்த உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்த முறை யார் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை ரேபரேலி தொகுதியில் தனது தாய் சோனியா காந்திக்கு பதில் மகன் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

இதனை தொடர்ந்து தற்பொழுது உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது, கட்சித் தலைவருடன் அவரது சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் ரேபரேலி தொகுதி எம்பியான சோனியா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் , காங்கிரஸ் தொண்டர்களோடு I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி கட்சியினரும் கலந்துகொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்