வயநாட்டில் அமோக வெற்றி !அமேதி தொகுதியில் தோல்வியை சந்தித்த ராகுல் காந்தி
இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நேற்று நடைபெற்றது.இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியிலும்,கேரளாவில் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.இதில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 706367 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இவருக்கு அடுத்த படியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனீர் 274597 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார். இதன்மூலம் ராகுல் 431770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க தொகுதியான அமேதி தொகுதியில் ராகுல் தோல்வி அடைந்துள்ளார்.ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார்.இவர் 468514 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.ராகுல் காந்தி 413394 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார். ஸ்மிருதி இரானி 55120 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.