பிரதமர் மோடியை திருடன் என்று விமர்சித்த விவகாரம் !நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.பிரதமர் மோடியை ” திருடன் ” என விமர்சித்ததாக பாஜக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில் மோடியை விமர்சித்த விவகாரத்தில் ஏற்கனவே வருத்தம் தெரிவித்த நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவதூறு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர வருத்தம் தெரிவிக்க கூடாது என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்ததற்கு பதிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
தற்போது பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு,உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.