மோடி குடும்பப்பெயர் தொடர்பாக, ராகுல் காந்தி அவதூறு வழக்கு; மார்ச் 23 இல் தீர்ப்பு.!
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில், சூரத் நீதிமன்றம் மார்ச் 23 அன்று தீர்ப்பு வழங்குகிறது.
மோடி குடும்பப்பெயர் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் வரும் மார்ச் 23 இல் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2019இல் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கர்நாடகாவின் கோலாரில் நடந்த பேரணியில் ராகுல், பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளாகியது.
எல்லா திருடர்களுக்கும் மோடி என்பதை எப்படி பொதுவான குடும்பப்பெயராக வைத்திருக்கிறார்கள்? என்று ராகுல் காந்தி மீது, பாஜக எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி அளித்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது. இது முழு மோடி சமூகத்தையும் இழிவுபடுத்தியது என்று புகார்தாரர் கூறினார்.
ராகுல் மீது தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில் மார்ச் 23ஆம் தேதி உத்தரவிட வாய்ப்புள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.