காலி சொம்பு மட்டும் தான் மிச்சம்… பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு விமர்சித்த ராகுல் காந்தி!
Rahul Gandhi: பாஜகவை ‘பாரதிய சொம்பு கட்சி’ என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 19ம் தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
இதன்பின் நேற்று 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் மே 7ம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவும், காங்கிரஸும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் குறிப்பாக பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதேசமயம் பிரதமரையும், மத்திய பாஜக அரசையும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்தவகையில் பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இரண்டாவது கட்டமாக 14 தொகுதிகளில் வரும் 7ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று அங்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளில் பொதுமக்களின் ஏரளமான பணத்தை பிரதமர் மோடி கொள்ளையடித்துள்ளார்.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, வறுமை ஒழிப்பு குறித்து பிரதமர் மோடி வாயை திறப்பதே இல்லை. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும். ஏழைகளின் பணத்தை பறித்து குறிப்பிட்ட சிலரை பாஜக கோடீஸ்வரர்களாக ஆக்கினார்கள்.
ஆனால், காங்கிரஸ் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும். நாட்டின் 40 சதவீத சொத்துக்கள் ஒரு சதவீத பேரிடம் மட்டுமே உள்ளது. தேவையற்ற விஷயங்களை பேசி முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் வேளையில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.
இந்த சூழலில் முதற்கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி பீதியில் உள்ளார். இதனால் பரப்புரையில் பிரதமர் மோடி பதற்றமாகவே காணப்படுகிறது. அது அவரது பேச்சிலேயே தெரிகிறது. 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற பேச்சை பிரதமர் மோடி நிறுத்திவிட்டார். எனவே இன்னும் ஒரு சில நாட்களில் மேடையில் கண்ணீர் சிந்தும் நிலையும் வரும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மற்றொரு கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி கூறியதாவது, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்துவிட்டு பதிலுக்கு பிரதமர் மோடி கொடுத்தது இந்த காலி சொம்பு தான் என்றும் பிரதமர் மோடியின் பாஜக கட்சி பாரதிய சொம்பு கட்சி எனவும் கடுமையாக விமர்சித்தார். இதனிடையே தமிழகத்தில் பாஜகவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்படி செங்கலை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டாரோ, அதே பாணியில் ராகுல் காந்தி சொம்பை கையில் எடுத்துள்ளார்.
BJP should be named as “Bhartiya Chombu Party. “. @RahulGandhi on fire in Karnataka .
பாஜகவை, “பாரதீய சொம்பு கட்சி” என்று அழைக்க வேண்டும். – ராகுல் காந்தி pic.twitter.com/LbXuT3OGRo
— G. Sundarrajan (@SundarrajanG) April 27, 2024