தொடரும் ‘நீட்’ நிராகரிப்பு… ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டும் பயனில்லை..

டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படத்தால் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறினர்.
மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக இந்தியா முழுக்க பொதுவாக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வில் இந்தாண்டு பல்வேறு சர்ச்சைகள், புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடுகள் தொடர்பாக மாநில நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் பதியப்பட்டன. இதனை அடுத்து நீட் முறைகேடுகள் குறித்த விசாரணையை மேற்கொள்ள சிபிஐ விசாரணை குழுவை நியமித்தது மத்திய அரசு.
நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நீட் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இருந்தும் நாடாளுமமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முடிந்த பிறகு அனுமதிக்கப்படும் என சபாநாயகர் கூறியதால் அதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இறுதியாக கடந்த ஜூன் 28ஆம் தேதியும், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து நீட் முறைகேடு குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் நாடளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் இன்று (ஜூலை 1) வரை ஒத்திவைக்கப்பட்டு இருந்தன.
இதனை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அன்று வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், நீட் முறைகேடு புகாரால் லட்சக்கணக்கான மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதுகுறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்த மக்களவை அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார்.
தொடர் அமளியை தொடர்ந்து இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகையில், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், மக்களவையில் ராகுல் காந்தி இன்று பேசுகையில், நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிப்பது முக்கியமானது என்பதை நாட்டு மாணவர்களுக்குச் சொல்ல விரும்புகிறோம். எனவே, இந்த நீட் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறினார்.
மீண்டும் அதே போல, எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானம் ஏற்கப்படாமல் குடியரசு தலைவர் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் கொண்டுவரப்பட்டதால், எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு மக்களவையில் இருந்து வெளியேறினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025