அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு ராகுல் காந்தி வாழ்த்து .!
அமேரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு ராகுல் காந்தி அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலானது கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது . அதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் வரலாற்றிலையே 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் ஜோ பைடன் . மேலும் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார் .
இருவருக்கும் பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி தனது டுவிட்டர் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும், நீங்கள் அமெரிக்காவை ஒன்றிணைத்து சரியான பாதையில் எடுத்து செல்வீர்கள் என்று நான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் துணை அதிபராக வெற்றி பெற்ற கமலா ஹாரிஸிற்கு வாழ்த்துக்களை தெரிவித்த ராகுல்காந்தி, அமெரிக்காவின் துணை அதிபராக பணியாற்றவிருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் . இது எங்களுக்கு பெருமையை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to President-elect @JoeBiden. I’m confident that he will unite America and provide it with a strong sense of direction.
— Rahul Gandhi (@RahulGandhi) November 7, 2020
Congratulations, Vice-President-elect @KamalaHarris! It makes us proud that the first woman to serve as Vice President of the USA traces her roots to India.
— Rahul Gandhi (@RahulGandhi) November 7, 2020