மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதியுற்ற விஜயகாந்திற்கு இறுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு இயற்கை எய்தினார்.
தற்போது, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், சக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவிற்கும் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எங்கு.? எப்போது.?
இது குறித்து தனது X தள பக்கத்தில், “தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவு மிகுந்த கவலை அளிக்கிறது. சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவர் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…