கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்.!

Vijayakanth - Rahul Gandhi

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதியுற்ற விஜயகாந்திற்கு இறுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு இயற்கை எய்தினார்.

தற்போது, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், சக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவிற்கும் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எங்கு.? எப்போது.?

இது குறித்து தனது X தள பக்கத்தில், “தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவு மிகுந்த கவலை அளிக்கிறது. சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவர் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்