கேரளா எனக்கு நெருக்கமான இடம் !பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பதிவுக்கு ராகுல் காந்தி பதில் தெரிவித்துள்ளார்.
Dear Mr Modi,
After your visit to Guruvayur – a huge flood visited Kerala, causing death & destruction.
A timely visit then would have been appreciated.
Kerala is suffering & still awaits a relief package, like those given to other flood hit states. This is unfair. https://t.co/wk9mZ4wSQg
— Rahul Gandhi (@RahulGandhi) August 30, 2019
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ,கேரளா எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இடம் ஆகும்.எனக்கு பலமுறை கேரளாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.நான் பிரதமராக பதவி ஏற்ற பின் முதல்முறையாக குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்குத்தான் சென்றேன் என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு வயநாடு தொகுதியின் எம்.பி.ராகுல் காந்தி பதில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,நீங்கள் குருவாயூர் வந்து சென்ற பிறகு இங்கு வெள்ளம் வந்தது .இந்த வெள்ளம் உயிரிழப்பு,அழிவுகளை ஏற்படுத்தியது.சரியான நேரத்தில் வந்திருந்தால் கண்டிப்பாக பாராட்டி இருப்பேன்.வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டநிவாரணம் போல கேரளாவிற்கு தேவையான நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.