ராம ராஜ்ஜியம் அளிப்பதாக கூறி , குண்டர் ராஜ்ஜியம் வழங்கியுள்ளது உ.பி. அரசு -ராகுல் காந்தி

ராம ராஜ்ஜியம் அளிப்பதாக கூறி , குண்டர் ராஜ்ஜியம் வழங்கியுள்ளது உ.பி. அரசு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
விக்ரம் ஜோஷி என்பவர் உத்திரபிரதேச மாநிலம் காசியாப்பத்தில் உள்ள விஜய் நகரை சேர்ந்தவர்.இவர் அங்குள்ள தனியார் பத்திரிக்கை ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 20 ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது மர்மநபர்கள் சிலர் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர்.மேலும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்குஇடையில் பத்திரிக்கையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தனது மருமகளுக்கு நடந்த துன்புறுத்தலை தட்டி கேட்டதற்கு இது நடந்துள்ளது.அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சிக்கு வந்த பின்னர் ராம ராஜ்ஜியம் அளிப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அதற்கு பதிலாக குண்டர் ராஜ்ஜியத்தை உத்திரபிரதேச அரசு வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
अपनी भांजी के साथ छेड़छाड़ का विरोध करने पर पत्रकार विक्रम जोशी की हत्या कर दी गयी। शोकग्रस्त परिवार को मेरी सांत्वना।
वादा था राम राज का, दे दिया गुंडाराज।
— Rahul Gandhi (@RahulGandhi) July 22, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025