எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தார்கள் என்பது மோடி அரசுக்குத் தெரியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 25 முதல் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தது.நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.இதன் விளைவாக பல்வேறு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்தே சென்றனர். அந்த சமயங்களில் பலரும் நடந்து செல்லும் வழியில் பல காரணங்களால் உயிரிழந்தனர்.
இதனிடையே தான் நேற்று நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் நடைபெற்றது.அப்பொழுது கொரோனா ஊரடங்கின் போது எவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்பதை அரசு கணக்கிடவில்லை என்று மத்திய தொழில்த்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் எழுத்துப்பூர்வமாக பதில் தெரிவித்தார்.இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ஊரடங்கு காலத்தில் எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தார்கள், எத்தனை பேர்கள் வேலைகள் இழந்தனர் என்பது மோடி அரசுக்குத் தெரியாது. அரசு அவர்கள் இறக்கவில்லை என்றால் அந்த எண்ணிக்கை அவர்களிடம் இல்லை ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இந்த உலகத்துக்கு தெரியும்.ஆனால் மோடி அரசுக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…