ராமர் கோவில் திறப்புக்கு ஜனாதிபதியை அழைக்காததற்கு இதுவே காரணம்: பாஜக அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
ஜனாதிபதி திரெளபதி முர்மு ’ஆதிவாசி’ (பழங்குடி சமூகம்) என்பதால் அவரை ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கவில்லை என ஆளும் பாஜக அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் இன்று பாரத் ஜோடோ யாத்திரையின் போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதே பாஜக தலைமையிலான அரசை அவர் கடுமையாக சாடினார்.
ராகுல் காந்தி பேசும் போது, “ராமர் கோவில் நிகழ்வைப் பார்த்தீர்களா? பெரும் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் தலித் சமூகத்தை சேர்ந்த முகங்களை பார்க்க முடிந்ததா? நம் குடியரசுத் தலைவர் பழங்குடி சமூகத்தை என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வின் போது விவசாயி அல்லது தொழிலாளியைப் பார்க்க முடியவில்லை, எங்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முகங்கள் காணப்படவில்லை.
நாடாளுமன்ற தேர்தல்: 11 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த சமாஜ்வாடி கட்சி
ஆனால் அதானி, அம்பானி மற்றும் அவர்களது குடும்பங்களைப் பார்த்தோம். பல தொழிலதிபர்களும் அங்கு இருந்தனர். இதோடு, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், நரேந்திர மோடி ஆகியோர் இருந்தனர்,” என்றார். மேலும் அவர் பேசுகையில், “இது அவர்களின் (பாஜகவினர்) இந்தியா, உங்களுடையது கிடையாது. நீங்கள் செய்வது எல்லாம் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கோஷமிடுவது மட்டுமே, அவர்கள் செய்வது ஹெலிகாப்டர் பயணம் செய்து பணம் சம்பாதிப்பது மட்டுமே” என விமர்சித்தார்.