சுதந்திர தின விழாவில் கடைசி இருக்கையில் ராகுல் காந்தி! சர்ச்சையான விவகாரம்…

Rahul Gandhi participated in the 78th Independence Day celebrations at Delhi

டெல்லி : செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 10 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெற்றுள்ளார்.

78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக இந்திய தேசியக்கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பில் உள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்குவதே மரபு. ஆனால், ராகுலுக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி கடைசி வரிசைக்கு முன் இருக்கையில், பாரிஸ் ஒலிம்பிக் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களான மனு பாக்கர், பிஆர் ஸ்ரீஜேஷ் ஆகியோருடன் ராகுல் காந்தி அமர்ந்திருந்தார்.

முன் வரிசையில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் அமர்ந்திருந்த நிலையில், கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்தில் உள்ள ராகுல் காந்திக்கு கடைசி வரிசைக்கு முன் வரிசையில் இரண்டாவது இடம் ஒதுக்கப்பட்டது விவாதத்தை எழுப்பியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் இருந்ததாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெரும் அளவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடங்களை பெறாததாலும் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாக இருந்தது. ஆனால், இப்பொது 99 தொகுதியுடன் எதிர்க்கட்சி என்ற அங்கீகாரத்தை காங்கிரஸ் கட்சி இந்த முறை பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்  இருக்கையில் ராகுல் காந்தி அமைந்திருந்தார். அப்படி இருக்கையில், சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கான மரியாதை ஏன் கொடுக்கவில்லை என்றும், அவருக்கான இருக்கையும் சரியாக ஒதுக்கப்படாதது குறித்தும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த காலத்தை பின்னோக்கி பார்க்கும் பொழுது, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின் போது, ​​சோனியா காந்திக்கு சுதந்திர தின விழாவில், முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
Ravikumar - passes away
Dharshan
Venkatesh Iyer
aakash chopra abhishek sharma
elon musk donald trump
mk stalin assembly NEET