உத்தரபிரதேசத்தில் 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது சகோதரர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உயிரிழந்த அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது இவர்கள் சென்ற வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலையில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி நடந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. 144 தடை உத்தரவை மீறி ராகுல்காந்தி சென்றதால் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்ன நடந்தாலும் ஹத்ரசுக்கு சென்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்காமல் பின்வாங்க போவதில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் கடந்த மாதம் 14-ம் தேதி புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, இளைஞர்கள் 4 பேர் அந்த இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, பல இடங்களில் எலும்பு முறித்து, நாக்கை வெட்டி உள்ளனர்.
பலத்த காயங்களுடன் அந்த அப்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…