சமீபத்தில் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.
காஷ்மீர் விவகாரத்தில் முதலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.காஷ்மீருக்கு நிலைமையை அறியச் சென்ற பல தலைவர்கள் ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்தநிலையில்தான் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக,காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் நிலையை நேரில் வந்து பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார்.
இன்று ஜம்மு காஷ்மீர் மாநில நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றனர்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…