ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் கருத்துக்கு வரவேற்பு!
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் குறித்த ராகுல் காந்தியின் கருத்து, அவர்களின் விடுதலைக்கு உந்துதலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரி இல்லை என தெரிவித்தார். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள கருத்து, வேடிக்கையானது என்றும் கனிமொழி குறிப்பிட்டார். பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், சட்டம்-ஒழுங்கினை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.