ஜூனியர் இன்ஜினியர் இரண்டாம் தாள் தேர்வு முடிவு எப்போ.? எஸ்.எஸ்.சி விளக்கம்.!
ஜூனியர் இன்ஜினியர் இரண்டாம் தாள் தேர்வு செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூனியர் இன்ஜினியர் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் தேர்வு, 2018 இன் முடிவை தேர்வு ஆணையம் செப்டம்பர் மாதம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எஸ்.எஸ்.சி, ஜே.இ. தேர்வு முடிவின் சரியான தேதியைக் இன்னும் குறிப்பிடவில்லை. ஆனால் முடிவு ssc.nic.in இல் வெளியாகும் என தெரிவிக்கப்படுள்ளது.
சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி தேர்வு நடத்துகிறது.
தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது. எஸ்.எஸ்.சி ஜே.இ.யின் இறுதி தகுதி பட்டியல் மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் வெளியிடப்படுகிறது.
இரண்டாம் தாள் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் எஸ்.எஸ்.சி குறுகிய பட்டியலிடும் அனைத்து மாணவர்களும் ஆவண சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தைப் பெற்றதற்கான சான்றாக தேர்வர்கள் தொடர்புடைய சான்றிதழ்களை பெற வேண்டும்.