தான் பிறக்கும் போது உடன் இருந்த செவிலியரை இன்று கண்டார் ராகுல் காந்தி!
ராகுல் காந்தி பிறக்கும் போது அவரது தாயார் சோனியா காந்தி அவர்களுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் ராஜம்மா அவர்களை இன்று ராகுல் காந்தி சந்தித்தார். கேரளாவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இதை செய்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாடு அருகே சுல்தான் பத்தேரி கல்லூர் வடபகுதியைச் சேர்த்தவர் ராஜம்மா.அவருக்கு தற்போது வயது 72, டெல்லியில் ஹோமி – பேமி மருத்துவமனையில் செவிலியராகப் பயிற்சி பெற்று ராணுவத்தில் செவியராக இருந்து ஒய்வு பெற்றவர்.இவர் செவிலியராக இருந்த மருத்துவமனையில் தான் ராகுல் காந்தி அவர்கள் பிறந்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி வெளிநாட்டவர் என்று விமர்ச்சனம் வந்த நிலையில்,அவர் ஒரு இந்தியர் அதற்கு நானே சாட்சி என்று செவிலியர் கூறியது குறிப்பிடத்தக்கது..