வயநாடு தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

Published by
Venu

கல்பெட்டாவில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

கேரள மாநிலம்  வயநாடு தொகுதியில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதேபோல்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திர பிரதேச மாநிலம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

மேலும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து  ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில்,தென்னிந்திய மக்கள் மோடியால் தனித்துவிடப்பட்டதாக உணர்கிறேன் என்றும்  அவர்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார்.

பின்னர் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் போட்டியிடுவதை காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய கல்பெட்டா வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் வந்தார்.ராகுலுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வந்தனர்.

பின்னர் கல்பெட்டாவில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.அதேபோல் தென் இந்தியாவில் முதல்  முறையாக மக்களவை தேர்தலில்  ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Venu

Recent Posts

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா : இரு மாநில முதல்வர்கள் பங்கேற்பு.!

வைக்கம்: கேரள மாநிலம் வைக்கத்தில் இன்று வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு…

1 hour ago

வெளுத்து வாங்கும் கனமழை… இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை? முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா…

2 hours ago

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை… அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.!

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து…

2 hours ago

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.…

3 hours ago

தொடர் கனமழை… நெல்லையில் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

திருநெல்வேலி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை…

3 hours ago

Live: வைக்கம் போராட்ட நிறைவு விழா முதல்… சாத்தனூர் அணை நீர் திறப்பு வரை.!

சென்னை: வைக்கம் போராட்டத்தின் 100-ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி கேரள மாநிலத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

3 hours ago