வயநாடு தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார் ராகுல் காந்தி
கல்பெட்டாவில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திர பிரதேச மாநிலம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
மேலும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில்,தென்னிந்திய மக்கள் மோடியால் தனித்துவிடப்பட்டதாக உணர்கிறேன் என்றும் அவர்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார்.
பின்னர் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் போட்டியிடுவதை காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய கல்பெட்டா வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் வந்தார்.ராகுலுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வந்தனர்.
பின்னர் கல்பெட்டாவில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.அதேபோல் தென் இந்தியாவில் முதல் முறையாக மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.