தங்கள் பிரிவில் சேராததால் சக மாணவருக்கு ராகிங் தொல்லை… மாணவரின் தந்தைக்கும் அடிஉதை.!
கொல்கத்தா மாணவர் ஒருவர் டிஎம்சிபி மாணவர்கள் பிரிவில் சேராமல் இருந்ததற்காக ராகிங் செய்ததாக சக மாணவர்கள் மீது குற்றம் சாட்டினார்.
கொல்கத்தாவில் சட்ட கல்லூரி மாணவர், சக மாணவர்கள் தன்னை ராகிங் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவரை திரிணாமுல் சத்ர பரிஷத் (டிஎம்சிபி) எனும் மாணவர் பிரிவில் சேறுவதற்கு அந்த பிரிவை சேர்ந்த மாணவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இந்த வற்புறுத்தலுக்கு மறுத்ததற்காக அந்த மாணவர் ராகிங் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கல்லூரி நிர்வாகத்திடம் இந்த விஷயத்தை மாணவர் புகார் அளித்ததை அடுத்து அந்த மாணவரையும் , மாணவனின் தந்தையையும் டிஎம்சிபி பிரிவினர் தாக்கியதாகவும் சம்பந்தப்பட்ட மாணவர் குற்றம் சாட்டினார். அவர் குற்றம் சுமத்தியதை தொடர்ந்து ராகிங் செய்தவர்கள் மீது அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கல்லூரியின் துணை முதல்வர் உறுதியளித்தார்