60 ஆயிரம் கோடிக்கு விமானம் வாங்க பிரான்ஸ் பறந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்!
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக 2016ஆம் ஆண்டு மோடி அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.அதன் படி, 60 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் ரக போர் விமானம் வாங்க உள்ளது.
இதற்கான முதல் விமானத்தை இன்று இந்தியா வசம் பிரான்ஸ் ஒப்படைக்க உள்ளது. இதனை வாங்குவதற்கான நிகச்சியில் கலந்து கொள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு விமானத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரவுள்ளது.