ரபேல் வருகை..மேலும் ஒரு பெருமை மோடி புகழாரம்.!
கடந்த 2016-ம் ஆண்டு இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள், முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணி முடிவடைந்ததால் முதற்கட்டமாக 5 விமானங்கள் பிரான்சில் இருந்து ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு இன்று வந்தடைந்தது.
அங்கு ரபேல் போர் விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரபேல் விமானங்களை விமான படைத் தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார்.
राष्ट्ररक्षासमं पुण्यं,
राष्ट्ररक्षासमं व्रतम्,
राष्ट्ररक्षासमं यज्ञो,
दृष्टो नैव च नैव च।।
नभः स्पृशं दीप्तम्…
स्वागतम्! #RafaleInIndia pic.twitter.com/lSrNoJYqZO— Narendra Modi (@narendramodi) July 29, 2020
இந்நிலையில், இந்தியா வந்த ரஃபேல் விமானங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், நாட்டை பாதுகாப்பது பெருமைக்குரிய செயல் எனவும் ரஃபேல் வருகை குறித்து மோடி கருத்து தெரிவித்துள்ளார்.