ரபேல் விவகாரம்…!உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது மத்திய அரசு…!
மத்திய அரசு ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் MN.சர்மா என்பவர் மனுதாக்கல் செய்தார்.அந்த மனு அக்டோபர் 10 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையில் விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் KK.வேணுகோபால் இந்த வலக்கை பொது நல வழக்காக எடுத்துக் கொள்ள கூடாது.இது அரசியல் காழ்புணர்ச்சியால் தேர்தல் சமயத்தில் மத்திய அரசின் மீதும் , பிரதமர் மீதும் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடரப்பட்ட வழக்கு எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று வாதாடினார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்ற சூழலில் நீதிபதி ரஞ்சன் கோக்காய் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு எந்தமாதிரியான நடைமுறைகளை பின்பற்ற பட்டது என்ற விளக்க அறிக்கையை தாக்கல் செய்யவேண்டுமென்று கூறி இந்த வழக்கை ஒத்திவைத்தார் தலைமை நீதிபதி.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 27 ஆம் தேதி)உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது மத்திய அரசு. ரபேல் விவகாரத்தில் சீலிடப்பட்ட 3 கவரில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.மேலும் ரஃபேல் போர் விமானம் குறித்த ஒப்பந்த நடைமுறை, விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.