30,000 அடியில் எரிபொருள் நிரப்பிய ரபேல் போர் விமானங்கள் .!
கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுனது. இந்த 36 ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு ரூ.59 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள், மற்ற விமானங்களில் இருப்பது போன்ற அனைத்து அம்சங்களும் பயிற்சி விமானங்களிலும் உள்ளது. இந்த 36 விமானங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.
இந்த 36 விமானங்களில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணி முடிவடைந்ததால் இவற்றை முறைப்படி பெற்றுக்கொள்ள கடந்த அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்று விமானங்களுக்கு பூஜையும் செய்தார்.
10 விமானங்களில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே உள்ள நிலையில், மீதமுள்ள 5 விமானங்கள் நேற்று பிரான்சில் இருந்து இந்தியாவை நோக்கி நேற்று தனது பயணத்தை தொடங்கியது. இந்தியா-பிரான்ஸ் இடையே 7 ஆயிரம் கி.மீ. தூரம் ஆகும். , ரபேல் போர் விமானங்கள் நடுவானில் எரிபொருள்கள் நிரப்பிக் கொள்ளவதாகவும் இடையில் அமீரகத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டு விமானப்படை தளத்தில் தரையிறங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
Few shots from 30,000 feet! Mid air refuelling of #RafaleJets on their way to #India@IAF_MCC @French_Gov @FranceinIndia @MEAIndia @IndianDiplomacy @DDNewslive @ANI @DefenceMinIndia @Armee_de_lair @JawedAshraf5 pic.twitter.com/VE7lJUcZe7
— India in France (@Indian_Embassy) July 28, 2020
இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் 30,000 அடி உயரத்தில் நடுவானில் எரிபொருள் நிரப்பும் காட்சி வெளியாகி உள்ளது.