ரபேல் விமானங்கள் வருகை.. 4 கிராமங்களுக்கு 144 தடை.!
இன்று பிற்பகல் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் விமானப்படை தளத்தில் 5 ரபேல் விமானங்கள் நம் படையுடன் இணைய உள்ளன. இந்நிலையில் இதனை முன்னிட்டு விமானப்படை தளத்தை சுற்றியுள்ள நான்கு கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானம் தரையிறங்கும்போது வீடுகளின் மாடியில் இருந்து புகைப்படம் எடுக்கவும், அந்தப் பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது, உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தேசிய முக்கியத்துவம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.