பிரதமர் நரேந்திர மோடியும்,அணில் அம்பானியும் இணைந்து ரூ.1.30 லட்சம் கோடியை சுருட்டிக்கொண்டனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.