ரஃபேல் போர் விமான விவகாரத்தில் இந்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசு தான் பரிந்துரை செய்தது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹாலண்டே கூறுகையில் ‘பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு பிரான்ஸூக்கு வழங்கப்படவில்லை. அம்பானி நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது’ என கூறினார்.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் ரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை தனது வணிக ரீதியான பங்குதாரராக பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனம் தேர்ந்தெடுத்ததில் இந்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…