ரபேல் ஒப்பந்தம்!!தொடரும் காங்கிரஸ்-பாஜக மோதல்….

Default Image

முதலில் ரபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தான்.

அதன் பின்னர ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் .

Image result for rafale congress vs bjp

மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர்.அவர்  முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் இருந்தே காங்கிரஸ் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது.

நரேந்திர மோடியின் அரசு ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டதாகவும்  காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.

அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியினர் போர் விமானம் குறித்த தொழில்நுட்பம் தான் இரகசியம்  காக்கபடவேண்டும்.அதன் விலை அல்ல என குற்றம் சாட்டியது.

இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அப்போதைய பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா ஆலந்து ரிலையன்ஸ் தான் கூட்டணியில்  இருக்க வேண்டும் என்று இந்திய அரசு வற்புறுத்தியதால் எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை கூறியது மேலும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Image result for rafale congress vs bjp

இறுதியாக போபர்ஸ் ஊழல் வழக்கில் என்ன நடைமுறைகளை காங்கிரஸ் கையாண்டதோ அதே நிலையைத்தான் மோடியின் பாஜக அரசும் எடுத்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை அநியாயமான முறையில் செலவிட்டு விட்டு, அதற்கான காரணங்கள் கேட்கப்படும்போது பாதுகாப்பு, இரகசியம் என்ற பெயரில் வெளியிடவிடாமல் தடுப்பது என்ற போக்கில்தான் இந்த அரசாங்கம் சென்று கொண்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அரசு எந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி 126 ரபேல் விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக வெறும் 36 விமானங்களை அநியாய விலையில் வாங்குவதன் மூலம் பாஜக அரசின் முறைகேடுகளை காங்கிரஸ்  கட்சி தொடர்ந்து  வெளிக்காட்டி வருகிறது.இதன் இறுதி வடிவம் என்ன என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்