பொதுத்தேர்வில் குஜராத் கலவரம் பற்றிய கேள்வி – CBSE கண்டனம்

பொதுத்தேர்வு வினாத்தாளில் குஜராத்தில் நடந்த கலவரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டதற்கு சிபிஎஸ்இ கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி முதல் பருவத் தேர்வு நவம்பர் -டிசம்பர் மாதத்திலும், 2-ஆம் பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெறும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு டிசம்பர் 1 முதல் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற CBSE 12-ம் வகுப்பு Sociology  வினாத்தாளில் 2002ல் குஜராத்தில் நடந்த கலவரம் எந்த அரசாங்கத்தின் கீழ் நடந்தது.? என்ற கேள்வியில் காங்கிரஸ், ஜனநாயகம், பிஜேபி மற்றும் குடியரசு ஆகியவை மாணவர்களுக்கு பதில் அளிக்க கொடுக்கப்பட்டு இருந்தது.

இதற்கு சிபிஎஸ்இ கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த கேள்வி பொருத்தமற்றது எனவும் வினாத்தாள்களை அமைப்பதற்கான சிபிஎஸ்இ வழிகாட்டுதல்களை மீறுவதாகும். பொதுத்தேர்வு வினாக்களில் கேள்விகள் கல்வி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும்.

மதம் & வகுப்பு சார்ந்த நடுநிலைத்தன்மையுடனும் இருத்தல் அவசியம் என்று CBSE தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்