திரையரங்கில் விளம்பரம் : நீதிமன்றத்துக்கு சென்ற வழக்கு! PVR Cinemas, INOX-க்கு அபராதம்…
"நேரம்தான் இன்றைய நிலையில் பணம், ஒவ்வொருவரின் நேரமும் விலைமதிப்பற்றது. அதை விரயமாக்கும் உரிமை எவருக்கும் இல்லை" என்று நுகர்வோர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

கர்நாடகா : அரை மணி நேர விளம்பரத்தைக் காட்டி தனது பொன்னான நேரத்தை வீணடித்ததற்காக பெங்களூரில் வசிக்கும் ஒருவர் PVR-INOX மீது வழக்குத் தொடர்ந்தார். புகார்தாரர் வழக்கில் வெற்றி பெற்றார், PVR-INOX நிறுவனம் இழப்பீடு செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட் டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், பிவிஆர் சினிமாஸ், ஐநாக்ஸ் மீது, படம் திரையிடப்படுவதற்கு முன்பு நீண்ட விளம்பரங்களை ஒளிபரப்பி 25 நிமிட நேரத்தை வீணடித்ததாகவும், அதனால் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தனது புகாரில், அபிஷேக் எம்.ஆர். டிசம்பர் 26, 2023 அன்று மாலை 4.05 மணி நிகழ்ச்சிக்காக ‘சாம் பகதூர்’ திரைப்படத்திற்கு மூன்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
படம் மாலை 6.30 மணிக்கு முடிவடைய வேண்டியிருந்ததாகவும், அதன் பிறகு தனது வேலைக்குத் திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை என்றும், ஏனெனில் படம் மாலை 4.30 மணிக்குத் தொடங்கியது. திரைப்படம் திரையுடைவதற்கு பதிலாக, அப்போது விளம்பரங்களும் திரைப்பட டிரெய்லர்களும் காட்டப்பட்டன. இதன் விளைவாக சுமார் 30 நிமிடங்கள் வீணாகியது.
இதன் காரணமாக, அவர் அன்றைய தினம் திட்டமிடப்பட்ட பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், இதனால் மேலும் அவருக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையை கணக்கிட முடியாது என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘நேரம் என்பது பணம் போன்றது என்பதை வலியுறுத்திய நுகர்வோர் நீதிமன்றம், ஒவ்வொருவரின் நேரமும் விலைமதிப்பற்றது. அதை விரயமாக்கும் உரிமை எவருக்கும் இல்லை. புகார்தாரருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய பிவிஆர் சினிமாஸ் மற்றும் ஐனாக்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, புகார்தாரரின் நேரத்தை வீணடித்ததற்காக ரூ.50,000, மன உளைச்சலுக்கு ரூ.10,000 என புகார் அளித்தவருக்கு மொத்தமாக 65,000 ரூபாய் நிவாரணம் வழங்க பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டதற்காக பிவிஆர் சினிமா மற்றும் ஐனாக்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜஸ்ட் மிஸ்!! நூலிழையில் உயிர் தப்பிய கங்குலி.! நடந்தது என்ன?
February 21, 2025
சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.360 குறைவு!
February 21, 2025
சென்னையில் ‘FICCI MEBC – South Connect 2025’! தொடங்கி வைக்கும் துணை முதல்வர் உதயநிதி!
February 21, 2025
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி! முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட பதிவு!
February 21, 2025