பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைப்பது இந்து திருமண சட்டப்படி திருமணம் ஆகாது – பாட்னா உயர்நீதிமன்றம்
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள லக்கிசாராய் பகுதியில் உள்ள கோவிலில் ராணுவத்தில் சிக்னல்மேனாக இருந்த மனுதாரர் ரவிகாந்த், பத்து ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் உள்ள லக்கிசராய் பகுதியில் கடத்தப்பட்டார். அப்போது அவரை சிலர் கடத்திச் சென்ற நிலையில் ஒரு பெண்ணுடன் கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனை எதிர்த்து ரவி காந்தின் மாமா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரை பெற மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பின்னர் லக்கிசராய் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குச் சென்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 2020 ஆம் ஆண்டு நிராகரித்தனர்.
மீண்டும் சிக்குகிறாரா ராகுல் காந்தி? தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! 2 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு!
இதனை தொடர்ந்து இவர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்ணின் நெற்றியில் நிர்பந்தமாக குங்குமம் வைப்பது இந்து திருமண சட்டப்படி திருமணமாகாது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், மணமகன் மற்றும் மணமகள் யாக குண்டத்தை சுற்றினால் மட்டும்தான் திருமணம் ஆக கருதப்படும் என்று தீர்ப்பளித்தனர். மேலும், லக்கிசராய் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முடிவுகள் தவறானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.